பெரம்பலூர் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கென பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குசாவடிகளும், குன்னம் தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 636 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாக்குச்சாவடி மையங்களில் பெரம்பலூரில் 30 மையங்களும் குன்னத்தில் 39 மையங்கள் என மொத்தம் 69 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக இனம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து புகார்கள் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 18004257031 என்ற கட்டமில்லா தொலைபேசியில் தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து புகார்கள் அளிக்கலாம்.
மேலும் ஊடககங்களில் வெளியாகும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளுர; தொலைக்காட்சி செய்திகள் மற்றும் விளம்பரங்கள் தொடர;ந்து கண்காணிக்கப்படுகின்றது.
இந்த அறைகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நந்தகுமார் பார்வையிட்டு கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் பணிகளை குறித்து ஆய்வு செய்தார். மேலும், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்டு,
கட்டுப்பாட்டு அறையில் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 45 புகார்கள் வரப்பெற்றுள்ளது அனைத்துப் புகார்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.