Perambalur: General and Urinary Surgery Camp organized by Niranjan Hospital! More than 100 people participated.

பெரம்பலூர் தாலுகா ஆபீஸ் எதிரே உள்ள நிரஞ்சன் மருத்துவமனையில், பொது சிறுநீரக அறுவை சிகிச்சை முகாம் டாக்டர் பால்ராஜ் தலைமையில் நடந்தது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், பித்தப்பை கற்கள், குடல் இரைப்பை வியாதிகள், சிறுநீரக கற்கள், நீர் தாரையில் சதை வளர்ச்சி, நீர் தாரை சுருக்கம், கர்ப்பப்பை கட்டிகள் ஆகிய நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் இலவச ஸ்கேன், மற்றும் அறுவை சிகிச்சை கட்டணத்தில் சலுகை போன்றவைகள் அளிக்கப்பட்டது. இந்த முகாமில், பொது மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர் பால்ராஜ், மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை லேசர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிரஞ்சன் ராஜ், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மகளிர் அறுவை சிகிச்சை மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஐஸ்வர்யா நிரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் ஆலோசனைகள், இலவச மருந்து மாத்திரைகளை வழங்கினர். 25க்கும் மேற்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் செய்யப்பட்டது.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!