Perambalur: On the first day of opening the shop, 5 kg of gold worth around Rs. 4.75 crores was sold!
பெரம்பலூரில் கார்ப்பரேட் கம்பனிகளின் புதிய நகைக்கடைகளை திறப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் ஒரு கம்பனி கடையை திறந்தது. அது திறந்த நாளன்றே சுமார் 5 கிலோ மதிப்பிலான தங்கத்தை வியாபாரம் செய்தது. பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு நகைகளை அள்ளி வாங்கி குவித்தனர்.
இதனால், சிறு தொழிலாகவும், கைத் தொழிலாகவும், நகைக்கடைகளை பரம்பரையாகவும், நீண்ட காலமாக நடத்தி வரும் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வளர்ந்து வரும் பெரம்பலூர் நகருக்கு இன்னும் புதிய நகைக்கடைகளின் வருகை அதிகாிக்கும் என தங்க வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, சிறிய கடை முதல் பெரிய கார்பரேட் கடைகள் வரை வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஒரு குறிப்பிட்ட அளவு செய்கூலி மற்றும் சேதாரம் தள்ளுபடியில் இறங்கி உள்ளனர்.