Perambalur: One arrested for hunting iguana; 3 others flee!
பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் அருகே உள்ள மலைப்பகுதியில் வனவர் அருணாஸ்ரீ, வன காப்பாளர்கள் மணிகண்டன், அறிவுச்செல்வம் ஆகியோர் இன்று அதிகாலை 4 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலை பகுதியில் தலையைில் லைட் அடித்து கொண்டு அடையாளம் 4 பேர்கள் சுற்றி வருவது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று விரட்டி மடக்கிப் பிடிக்க முயன்ற போது தப்பிக்க முயன்ற 4 பேரில் ஒரு வாலிபரை பிடித்தனர். அவர், அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலையை சேர்ந்த பிச்சைமுத்து மகன் வெங்கடேஷ்(36) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து வேட்டையாடி பிடிக்கப்பட்ட உடும்பு ஒன்றை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய 3 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.