Perambalur: One worker died and three were injured after being trapped in a landslide while excavating sand at a petrol station!

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே பெட்ரோல் பங் ஒன்று உள்ளது. அது சென்னையை சேர்ந்த மோகனசுந்தரம் மனைவி சுபத்ரா (61) என்பவருக்கு சொந்தமானது. கடந்த சுமார் 10 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
தற்போது, அங்கு நடக்கும் கட்டுமான பணிகளுக்கான பெட்ரோல் பங்கில் புதைக்கப்பட்டிருந்த டேங்கை சுற்றி இருந்த மணலை எடுக்கும் பணியில் பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (50), வினோத்குமார் (35), சிற்றரசு (49), தேவராஜ் (69) ஆகியோர் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டிருந்தனர். இன்று மதியம் 1 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்த எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில், வேலுசாமி மண்ணுக்கடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். வினோத்குமார், சிற்றரசு, தேவராஜ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வேலுசாமியை சடலமாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார் விபத்து குறிதது விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497