Perambalur: Open water tank; Venkai Vayal, Ammapalayam-like incidents should be prevented; People drinking contaminated water in agony!!

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எசனை கிராமத்தில் கடைவீதி அருகே காமாட்சியம்மன் கோயில் உள்ளது. அதன் அருகே 2024 – 2025 திட்டப்பணியின் கீழ், ஊராட்சி பொதுநிதியில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் போர்வெல் அமைத்து, சிறிய தொட்டி அமைக்கும் பணி நடந்து முடிந்தது. ஆனால், அந்த தொட்டியின் மேற்பகுதி முற்றிலும் மூடப்படாமல் திறந்த வெளி தொட்டியாக உள்ளது. இதனால், குரங்குகள், பறவைகள், குளிப்பது, குடிப்பதுடன் எச்சமும் இட்டு செல்கின்றன. மேலும், காக்கை போன்ற பறவைகள் எடுத்து வரும் இறந்த எலிகள் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை தொட்டியில் போட்டு விட்டு செல்கின்றன. மேலும், காற்று வீசுவதால் தண்ணீரில் மண், புழுதி, குப்பைகள் காற்றில் பறந்து தொட்டியில் விழுந்துவிடுகிறது. இதனால், பாசி மற்றும் பூஞ்சைகள் சூரிய ஒளியில் வேகமாக வளருகின்றன.
மேலும், சமூக விரோதிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேங்கை வயல் போன்று மனிதக் கழிவுகளையோ, அல்லது பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் குரங்கு இறந்து கிடந்து பல நாட்கள் ஆகியும் தெரியாதது போல் ஆகிவிடக்கூடாது என தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகளவில் கூலி தொழிலாளர்கள் என்பதால் தங்களிடம் செலவு செய்து கொள்ள போதுமான பணம் இல்லை எனவும், அரசு அதிகாரிகளை எதிர்த்து போராட திராணி இல்லை என தெரிவிப்பதோடு, இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். அரசு நல்ல நோக்கத்தில், பொதுமக்கள் நல்ல தூய குடிநீரை பருகி நோயற்று வாழவேணடும் என நினைத்து திட்டம் தீட்டினாலும், சாமி வரம் கொடுத்து பூசாரி கொடுக்காத கதையாக உள்ளது. என திறந்த வெளியாக இருக்கும் தொட்டியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை எனில், பணி செய்த ஒப்பந்தாரர், பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டது என இரண்டு கண்களால் பார்த்து சான்றிதழ் வழங்கி பணிக்கான ரூ. 2.5 லட்சத்தை அனுமதித்த அதிகாரிகள் உரிய மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என அலட்சியமாக செயல்படுத் எசனை கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.












kaalaimalar2@gmail.com |
9003770497