Perambalur: Police conduct raids at the homes of rowdies!
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடக்காமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் தலைமையில், பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோகியராஜ், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், மாவட்டத்தில் குற்ற செயல்களில் வழக்கமாக ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடிகள், சந்தேக நபர்களின் வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
குற்றப்பின்னனி உடைய நபர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தும், அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏதேனும் உள்ளவாறு நடந்து கொண்டுள்ளார்களா என்பதையும் தீவிரமாக விசாரணை செய்தனர். இது வழக்கமான சோதனைதான் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.