Perambalur: Police find notorious rowdy and hand him over to his relatives!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் நவீன் @ நவீன்குமார். இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாததால், பெரம்பலூர் டவுன் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து நவீனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி நவீனுக்கு, தன்னை காணவில்லை என உறவினர் கொடுத்த புகார் தெரியாமல் போலீசார் வழக்கிற்காகதான் தேடி வருகிறார்கள் என நினைத்துக் கொண்டு தனது சகாக்களிடம் தஞ்சமடைந்துள்ளார். போலீசார் விசாரணையில் நவீன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததோடு, அவரை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.