Perambalur: Police opened fire on the rowdy Alaguraja who attempted to escape after attacking someone with a machete!
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல் பிளாசா அருகே கடந்த 24 ஆம் தேதி 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், போலீஸ் கஸ்டடியில் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி காளி என்கிற வெள்ள காளியை முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றனர். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூன்று பேர் காயமடைந்தனர். வெள்ள காளியை போலீசார் பத்திரமாக மீட்டு சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 5 தனிப் படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், பெரம்பலூர் பகுதிகளில் பதுங்கி இருந்த மதுரையை சேர்ந்த அழகுராஜா என்பவனை மங்களமேடு தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அபபோது, அவன் போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்ற நிலையில் போலீசார் அவனை துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அழகுராஜா உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் முதல்கட்ட தகவல்கள் தான் என்றாலும், தீவிர விசாரணைக்கு பிறகே இன்னும் என்ன நடந்தது என தெரியவரும்.