Perambalur police rushed to Salem to catch the robbers who took the car and escaped.

பெரம்பலூர் சங்குபேட்டை அருகே உள்ள சர்ச் அருகே வசிப்பவர் வணிகர் கருப்பண்ணன்(60), ஆனந்த் என்ற பெயரில், ஜூவல்லரி, மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு, அவரது வீட்டில், தனியாக ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். வெளியே சென்ற மகனின் வருகைக்காக வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்து வைத்திருந்தார். கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் கதவை உள்பக்கமாக பூட்டி தாளிட்டுக் கொண்டு, கருப்பண்ணனின் முகத்தை துண்டால் மூடி பிடித்து, கழுத்தில் அரிவாளை வைத்து, கொலை செய்து விடுவோம் என மிரட்டி பீரோ சாவியை பிடுங்கி அதில் இருந்த 880 கிராம் தங்க நகைகள் மற்றும் சுமார் 9 கிலோ வெள்ளி பொருட்கள், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து கொண்டு, வீட்டின் முன் நிறுத்தி இருந்த கருப்பண்ணனின் ஃபோக்ஸ்வாகன் காரில் தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து கருப்பண்ணன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. மணி தலைமையில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அங்குள்ள , சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நகரின் மையப் பகுதியில் நடந்த, இந்த துணிகர கொள்ளை சம்பவம், பெரம்பலூர் தொழில் அதிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்ற சம்பவம் நடந்தால் இந்த சம்பவத்தை எந்த குற்றவாளி செய்திருப்பார் என்பதை யூகிக்கும் ஆற்றலை போலீசார் பெற்றிருந்தனர். ஆனால், மேலும், போலீஸாருக்கு குற்றங்கள் குறித்த போதுமான பயிற்சி இல்லாததே இந்த கொள்ளை சம்பவங்கள் பெருக காரணம். போலீசார் செல்போன் நெட்வொர்க்கை மட்டுமே நம்பி பணிபுரிந்து வருகின்றனர்.

இது குறித்து தனிப்படை அமைத்துள்ள பெரம்பலூர் போலீசார் குற்றவாளிகள் சேலம், பெங்களூர் தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அங்கு சென்று கொண்டுள்ளனர். இன்று இரவுக்குள் குற்றவாளிகள் கைது செய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த ஓராண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவத்தில் ஈடுபடும், தொடர்பு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!