Perambalur Police SP, Corona Awareness to the public by providing mask!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு மாஸ்க் கொடுத்து பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. மணி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், வாகன ஓட்டிகளிடம், உரிய முறையில் மாஸ்க் அணிந்து கொரோனாவை தடுத்து பாதுகாப்பாக வாழ வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது, டி.எஸ்.பி. சஞ்சீவ்குமார், உதவிஆய்வாளர்கள் செல்வராஜ், கண்ணுசாமி, ஏட்டு, இந்திராணி மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.