Perambalur: Police trained to take fingerprints of criminals via computerised DIGITAL FINGERPRINT COLLECTION SYSTEM

பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு கணினி மயமாக்கப்பட்ட இயந்திரத்தின் (DIGITAL FINGERPRINT COLLECTION SYSTEM) வழியாக குற்றவாளிகளின் விரல்ரேகை எடுப்பது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்ய முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட இயந்திரங்கள் பற்றியும் அவற்றை உபயோகிப்பது பற்றியும் காவல்நிலையங்களில் பணிபுரியும் CCTNS காவலர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

போலீஸ் எஸ்.பி .ஆதர்ஷ் பசேரா, ஏ. எஸ்.பி. கோபாலசந்திரன் (தலைமையிடம்) மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா, விரல்ரேகை பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!