(காலைமலர் செய்தி எதிரொலி) : பெரம்பலூர் மாவட்ட விலங்குகள் வதைத் தடுப்பு சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் துவங்கப்பட உள்ளது. இச்சங்கத்தின் மூலம் விலங்குகளை துன்புறுத்துதலிருந்து தடுத்தல் , நோயுற்ற அனாதையான விலங்குகளை மீட்டு காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளித்து பாதுகாத்தல் மற்றும் விலங்குகளை துன்புறுத்தும் நபர்களுக்கு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி தண்டனை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் சட்டப்படியான அமைப்பினர்களாக கொண்டு செயல்படும், இம் அமைப்பிற்கு மாவட்ட விலங்குகள் வதைத் தடுப்பு சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேற்கண்ட பதவிகளுக்கு விலங்குகள் மீது ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள், வேலையில்லா கால்நடை மருத்துவ பட்டதாரிகள் ஆகியோர் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பத்தினை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில், இவ்விளம்பர வெளிவந்த தினத்திலிருந்து 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காலைமலர் கடந்த ஜுன்.13ம் தேதி செய்தி வெளியிட்டு இருந்தது . அதன் எதிரொலியாக புளூகிராஸ் அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.