Perambalur Public Motorists Suffer From Share Autos!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில், ஷேர் ஆட்டோக்கள் பாதாசாரிகளின் நடைபாதையை ஆக்கிரமித்து நிற்பதால், வாகன ஓட்டிகள், கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், பொதுமக்கள் வாகனங்கள் செல்லும் சாலையில் நடப்பதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்தி வாகனங்கள் சாலை அகலமாக இருந்தும் விரைவாக செல்ல முடிவதில்லை. மேலும், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விடுமோ என்ற அச்சத்திலேயே பாதசாரிகள் நடக்கின்றனர். மாமூல் பாதையை மீட்டுத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.