Perambalur: Public requests Minister Sivasankar to form Kunnam as a separate panchayat union!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களில் இருந்து சில பகுதிகளை பொதுமக்கள் வசதிக்காக குன்னத்தில் புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள மேலமாத்தூர், கீழமாத்தூர், சடைக்கன்பட்டி,அல்லிநகரம், நொச்சிக்குளம், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், ஆதனூர்,ஜெமீன்பேரையூர், ஜெமீன்ஆத்தூர், மேலஉசேன்நகரம், கீழஉசேன் நகரம் போன்ற பகுதி மக்கள் ஆலத்தூர் யூனியன் ஆபீசிற்கு செல்ல சுமார் 30 கிமீ தூரமும், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள பேரளி, சித்தளி, மருவத்தூர், ஒதியம், பெரியம்மாபாளையம், உள்ளிட்ட ஊர்களில் இருந்து வேப்பூர் சுமார் 25 கிமீ தூரமும், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அரசின் திட்டங்கள் தொடர்பாக அரசு அலுவலர்களை பார்க்க பயணிக்க வேண்டி உள்ளது. அதனால், பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அதோடு பொது போக்குவரத்தான பஸ்சில் செல்லும் பெண்களுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதனால், குன்னம், அந்தூர், வரகூர், பெரிய வெண்மணி, சின்ன வெண்மணி, கொளப்பாடி, மேலமாத்தூர், கீழமாத்தூர், வரிசைப்பட்டி, சடைக்கன்பட்டி, அல்லிநகரம், அழகிரிபாளையம், நொச்சிக்குளம், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், ஆதனூர், ஜெமீன்பேரையூர், ஜெமீன்ஆத்தூர், மேலஉசேன்நகரம், கீழஉசேன் நகரம், மூங்கில்பாடி, ஆதனூர், கொட்டரை, ஒதியம், பேரளி, சித்தளி, அசூர், எழுமூர், கீழப்புலியூர், துணிச்சப்பாடி, கரம்பியம், எலந்தங்குழி ஆகிய கிராமங்களை ஒன்றிணைத்து குன்னத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் அமைச்சர் சிவசங்கருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497