Perambalur: Quarry in Koneripalayam; Managing Director of Minerals Company inspects!
பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம் மலைப்பாதை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கல்குவாரி அனுமதி வேண்டி தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக கனிம நிறுவன மேலாண் இயக்குநர் அனில்மேஷ்ராம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேரில் சென்று நில வரைபடம், சுற்றுச்சூழல் தொடர்பாகவும் மற்றும் மலை பரப்பு குறித்த விவரங்களையும், ஆய்வு செய்தார். ஆய்வின்போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் த.பெர்னாட் பெரம்பலூர் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.