Perambalur: Rain causes low sheep supply at Siruvachur sheep market; traders who came in the morning returned disappointed!

File Cpoy
இந்துக்கள் மட்டும் அல்லாது அனைத்து மதத்தினருடன் நாடே கொண்டாடும் பண்டிகை தீபாவளி. தீபாவளிக்கு என்னதான் பலகாரங்கள் இனிப்புகள் செய்தாலும் அசைவ பிரியர்களுக்கு ஆட்டுக்கறி ஸ்பெசல் தனிதான். இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் மழை பெய்த காரணத்தினால், ஆடு வளர்த்து விற்பனை செய்பவர் அதிகளவில் வரவில்லை. அதிகாலை 3 மணிக்கே சந்தைக்கு காலிகிடந்தது. காலையில் வந்த வியாபாரிகளும் விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சிறுவாச்சூரில் வழக்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டு சந்தையானது காலை 9 மணியிலிருந்து சுமார் 10 மணிவரை கூட நடைபெறுவது உண்டு. ஆனால், வரும் திங்கட்கிழமை 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நேற்று நள்ளிரவில் பெருமளவில் வியாபாரிகள் கூடத் தொடங்குவார்கள்.
ஆனால், மழையால் ஆடுகள் வரத்து குறைவானதால், இன்று காலையில் சுமார் 3 மணிக்கு சந்தைக்கு வந்த வியாபாரிகளும் , விவசாயிகளும் வெறிச்சோடிய சந்தையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த வாரம் வழக்கத்தைக்காட்டிலும் குறைவாக சுமார் 50 லட்சம் அளவிற்கே ஆடுகள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 கோடி வரை விற்பனையாகும் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு, முன்கூட்டியே இறைச்சி கடைக்காரர்களும், மக்களும் ஆடுகளை போதுமான இருப்பை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.