Perambalur RTO Offices functioned today: more than 130 people arrived.
ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிக்காக தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.) இன்று சனிக்கிழமை செயல்படும் என அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் சனிக்கிழமை (செப். 9) இயங்கும். அன்றைய தினம் ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், நகல் ஓட்டுநர் உரிமம் வழங்குதல் ஆகிய பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணிகள் தொடர்பான சேவைகளைப் பெற விரும்புவோர் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சனிக்கிழமை ஏன்? வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால், அசல் ஓட்டுநர் உரிமத்தை தொலைத்தவர்கள் அதனைப் பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்தக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சனிக்கிழமை (செப். 9) விடுமுறை தினமாக இருந்தாலும், அன்றைய தினத்தை அலுவல் நாளாக கருதி பணியாற்ற வேண்டுமென ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த வாரத்தில் 915 லைசென்ஸ் எடுக்க வந்திருந்தனர். அதன் சராசரி 152 ஆகும். இன்று விடுமுறை நாள் என்பதால் புதிய லைசென்ஸ் எடுத்தல் மற்றும் புதுப்பித்தல் மற்றும் இதர அலுவல் தொடர்பாக இன்று சுமார் 135க்கும் மேற்பட்டோர் அலுவலகம் வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.