perambalur SDPIs have filed a petition for action against miscarriage due to vaccination
பெரம்பலூர் மாவட்டம், வ. களத்தூர் கிராமம், மில்லத் நகரை சேர்ந்தவர்கள் முஹமது பாரூக் (வயது 41). இவரது மனைவி ஜஸிமா ( 34) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஹபீபுர் ரஹ்மானின் மகளும், முஹமது இத்தீஸ்- ன் மனைவி அனிஸ் பாத்திமா ஆகிய இருவரும் கர்ப்பிணியாக இருப்பதால்,
அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த ஜுன்28ம் தேதி சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், அடுத்த நாள் இருவருக்கும் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
வலியால் துடித்த அவர்கள் இருவரும் தனித்தனியே திருச்சி, மற்றும் பெரம்பலூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று கருப்பையில் உள்ள கருவை அகற்றி உள்ளனர்.
முன்னதாக கரு நல்ல உள்ளதா என்றும் பரிசோதனை செய்ததில் நல்ல முறையில் உள்ளது என தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கொடுத்த சான்றும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையததிற்கு சென்று கேட்ட போது மருத்துவர்கள் (High Order Birth ) ஹெச்.ஓ.பி என்ற சிக்கல் உள்ளது என்றும், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் வ.களத்தூர் மக்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் பதில் அளித்ததாக தெரிவித்த அவர்கள்,
இன்று ஸ்.டி.பி.ஐ கட்சியினர் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தனர், அதில் மருத்துவ துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.