Perambalur: Snake on the roof of the bus stand; Passengers ran away screaming! Firefighters caught the snake!!
பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இன்று மதியம் சுமார் 1 மணி அளவில், அரியலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை தகரத்தின் மீது சாரைப்பாம்பு அங்குமிங்கும் ஊர்ந்து செல்வதை கண்ட பயணிகள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து அங்கிருந்தவர் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் பஸ் மேற்பகுதிக்கு சென்று தகரத்தை சாரைப்பாம்பை லாகவமாக பிடித்தனர். பின்னர். பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்து வனத்தில் விட ஏற்பாடு செய்தனர். இதனால், அங்கு சுமார் அரை நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.