Perambalur: Special pooja and food distribution on the occasion of Amavasya at the Muthumariamman Temple in Sangupet!
பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வண்ண மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை பெண்கள் மற்றும் மகளிர் குழுவினர். மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். 19 வார்டு அன்னதான குழுவினர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . மாதம் தோறும் வரும் அம்மாவாசை, பவுர்ணமி நாட்களில் தொடர்ந்து அன்னதானம் நடந்து வருகிறது. விழாவில் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை பூசாரி நீதிதேவன் நடத்தி வைத்தார்.