Perambalur: Sridevi and Bhoodevi’s marriage to Sri Srinivasa Perumal!
பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு மாலை 6:30 – 8:30 மணி அளவில் திருகல்யாண வைபவம் மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கங்களுடன் வெகு விமர்சையாக நடந்தது. ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் சிவசுப்பிரமணியம், மகேஸ்வரன், மருத்துவ உதவி இயக்குனர் மாரிமுத்து, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், குமார், சரவணன், ஆன்மீக மகளிர் அணி நிர்வாகிகள் இளவரசி, கவிதா உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர். பூஜை பாட்டாபி & சென்னை விக்ரமன் பட்டாச்சாரியார் குழுவினர் செய்து வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் என்.ரவிச்சந்திரன் செய்திருந்தார். விழா உபயதாரர் பெரம்பலூர் ஆன்மீக மகளிர் அணியினர் செய்திருந்தனர்.