Perambalur: “Ungaludan Stalin” project camp in Veppanthattai; MLA Prabhakaran provided welfare assistance to the beneficiaries!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வேப்பந்தட்டை, தொண்டப்பாடி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வேப்பந்தட்டை காந்தி மஹாலிலும் மற்றும் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட சில்லக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு சில்லக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், இன்று நடைபெற்றது.
இதில், வேப்பந்தட்டை காந்தி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பார்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து, பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் முறையாக பதிவு செய்து, பெறப்படும் மனுக்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் உள்பட ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.