Perambalur: Stalin’s Health-Care Medical Camp: MLA Prabhakaran provided medical reports to the beneficiaries.
பெரம்பலூர் அருகே உள்ள எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மருத்துவ முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் தொடர்பாக கேட்டறிந்து, முகாமில் முழு உடல் பரிசோதனை செய்த 4 நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும் 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டக்கங்களையும், 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினையும் யனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக உடனடியாக முகாமிலேயே வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் விவேகானந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தின், உதவி ஆணையாளர் பாஸ்கரன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆர்.மருதமுத்து மற்றும் சுமார் 250க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்பட 1066 பேர் கலந்து கொண்டனர்.