sivakami-IAS-2016-election பெரம்பலூர் தொகுதி சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக, திமுக சார்பில், சமூக சமத்துவப் படையின் நிறுவனர் சிவகாமி போட்டியிடுகிறார். இன்று முதற்கட்டமாக பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட எளம்பலூரில் தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் சிவகாமிக்கு எளம்பலூர் ஊர் எல்லையில் வெடிகள் முழங்க, மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டு இருந்த ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

பின்னர், அவ்வூரில் திரண்டு இருந்த ஏராளமான கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக சிவகாமி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் அங்கு பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சி தொடரவும், முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடரவும், கல்விக் கடன், விவசாயக்கடன் தள்ளுபடி செய்யவும், பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் பெறவும், மதுவை ஒழிக்கவும் தனக்கு வாக்களித்து இதுவரை இல்லாத அளவிற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.

எளம்பலூரில் பிரச்சாரத்தை முடித்த வேட்பாளர் சிவகாமி, எம்,ஜி.ஆர் நகர், இந்திரா நகர், செங்குணம், அருமடல், சறுக்கு பாலம், பாலம்பாடி, கவுள்பாளையம், நெடுவாசல், எறையூர் மற்றும் கல்பாடி, எறையசமுத்திரம், அய்யலூர், குடிக்காடு. சிறுவாச்சூர், விளாமத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம் பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்ட்டுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் துரைசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் கி.முகுந்தன், முன்னாள் எம்.ஏல்.ஏக்கள் ராஜ்குமார், டாக்டர் தேவராஜன், மற்றும் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் டாக்டர் வல்லபன், வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், செந்தில்நாதன் ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாதுரை, குமார், மற்றும் பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன், எளம்பலூர் கிளைக் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், இந்திய முஸ்லீம் லீக், ம.ம.க உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

நேர்காணல் : காணொளி


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!