பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் வேப்பந்தட்டை ஒன்றிய தி.மு.க சார்பில் அ.தி.மு.க அரசின் அவலங்களை விளக்கி தெருமுனை பிரச்சார ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
ஊராட்சி செயலாளர் சீத்தாராமன் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் அதிரடி அல்தாப், மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் , முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் பற்றியும், தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களைப் பற்றியும் விளக்கி பேசினார்கள்.
மேலும், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ப.செந்தில்நாதன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், இக்கூட்டத்தில் இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பழகன், நெசவாளர் அணி துணை செயலாளர் மணிவண்ணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட தி.மு.க வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 3 வது வார்டு செயலாளர் சரவணன் நன்றி தெரிவித்தார்.