Perambalur students achievement in the state level of 2 gold, 4 silver and 6 bronze

பெரம்பலூரில், டேக்வாண்டோ தொடங்கப்பட்ட முதல் 2 ஆண்டுகளில் மாநில அளவில் பெரம்பலூர் அரசுப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராம சுப்பிரமணிய ராஜா தெரிவித்துள்ளார்,

மேலும் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி 2013-2014 ஆம் கல்வி ஆண்டிலிருந்து கைப்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டுக்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. டேக்வாண்டோ விளையாட்டு 2016-2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்துதான் செயல்படுத்தப்பட்டது.

இந்த விளையாட்டுப் பிரிவிற்கு டேக்வாண்டோ பயிற்றுநராக ந.தர்மராஜன் என்பவர் நியமிக்கப்பட்டு சிறந்த முறையில் மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் திண்டிவனத்தில் கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ,மாணவியர்கள் இருபாலருக்கும் தனித் தனியாக நடத்தப்பட்டது.

இதில், பெரம்பலூர் விளையாட்டு விடுதியைச் சார்ந்த டேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனைகள் 15 பேர் கலந்து கொண்டனர். ஜே.கே. செந்தமிழ், மற்றும் இ.சிந்துஜா ஆகிய மாணவிகள் தங்கப்பதக்கமும்,

ராஜமாணிக்கம், ஜெய பியூலா செரின், கல்பனா சாவ்லா, மற்றும் அர்ச்சனா வெள்ளிப் பதக்கமும், சந்தியா, ஸ்ரீநிதி, யோகலட்சுமி, சிலம்பரசி, மீனாட்சி,இளவரசி ஆகிய மாணவிகள் வெண்கல பதக்கமும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கம் வென்ற மாணவிகள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவரை விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர்.

இந்திய பள்ளிகளின் குழுமம் நடத்தும் தேசிய டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் 14 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கு தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ஜே.கே.செந்தமிழ், 17 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கு புதுடெல்லி மாநிலத்தில், நடைபெறவுள்ள போட்டியில் சிந்துஜா, கல்பனா சாவ்லா, அபிநயா, மற்றும் சிலம்பரசி ஆகிய மாணவிகளும்,

19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு கேரளா மாநிலத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ஜெயபியூலா செரின், ராஜமாணிக்கம், இளவரசி, மற்றும் ஸ்ரீநிதி ஆகிய மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆரம்பிக்கப்பட்ட 2 வருடங்களிலேயே டேக்வாண்டோ மாணவிகள் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், பதக்கம் வென்ற அனைத்து மாணவிகளும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!