Perambalur SV Cyrus Dental and Maxillo facial Implant Center achieves feat by fitting a full set of dentures to a woman who had lost all her teeth; High-quality dental treatment comparable to Chennai and Trichy; Information from Dr. Theiveegan!

பெரம்பலூர் துறைமங்கலம் தீயணைப்பு நிலையம் எதிரே. ஜே.கே. மஹால் அருகே எஸ்.வி. சைரஸ் டென்டல் மற்றும் மாக்சிலோ பேசல் இம்ப்ளாண்ட் சென்டர் (பல் மற்றும் முகம், தாடை அறுவை சிகிச்சை மையம்) இயங்கி வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மையம் இந்த மையம் 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இம்மையத்தில் பல் சீரமைப்பு (அலைனர்ஸ்), க்ளிப் சிகிச்சை (பிரேசஸ்), பல்செட் (டென்டியூர்ஸ்), பல் மாற்று சிகிச்சை (டீத் இம்ப்ளான்ட்). பல் சொத்தை அடைத்தல், பற்கறைகளை அகற்றுதல், குழந்தை பல் மருத்துவம், பற்களை வெண்மைப்படுத்துதல், ரூட் கேனல், லேசர் சிகிச்சை, ஞானப்பல் அகற்றுதல் சிகிச்சை, முகம் , தாடை முறிவு அறுவை சிகிச்சை போன்ற பல் மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இம்மையத்தின் தலைவரும் இம்ப்ளாண்டிஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வாய், பல் மற்றும் முகம் தாடை அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.தெய்வீகன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பல் பரிசோதனை செய்து சிறந்த முறையில் பல் மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், இம்மையத்தில் தாடை எலும்பு முறிந்த நோயாளிகளுக்கு அதிக வலியின்றி பிளேட் பொருத்தப்படுகிறது. திருச்சி, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்து வரும் 3டி-சி.பி.சி.டி. ஸ்கேன் பெரம்பலூரில் உள்ள இம்மையத்தில் உலகத்தரத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாற்று பற்கள் பொருத்துவதற்கு டிஜிட்டல் முறையில் அளவெடுத்து, மாற்று பற்கள் பொருத்தப்படுகிறது. பற்களை சீரமைப்பதற்கு இன்விஸா அலைன் எனப்படும் இன்விசிபிள் பிரேசஸ் பொருத்தும் பல் மருத்துவ சேவை மிகக்குறைந்த கட்டணத்தில் தற்போது பெரம்பலூரிலேயே மேற்கொள்ளப்படுகிறது. வாயில் தாடை எலும்பு இல்லாத நிலையிலும், இம்ப்ளாண்ட் செய்து புது பற்கள் பொருத்தப்படுகிறது.

சமீபத்தில், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அனைத்து பற்களும் இழந்திருந்த நிலையில் பேசல் இம்பிளாண்ட் எனப்படும் முறையில், முழுபல் செட் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு, அந்த பெண்ணுக்கு புன்னகையான முகம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர் எஸ்.வி சைரஸ் வாய், பல் மற்றும் முகம் தாடை அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.தெய்வீகன் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!