Perambalur: Tamil Nadu Farmers’ Association demands free electricity connection for farmers at no cost!
பெரம்பலூரில் நடந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் சாதாரண முறையில் மின்னிணைப்பு வழங்க கோரி 2024-2025 ம் ஆண்டு வரை பதிவு செய்து காத்திருக்கும் 5969 விவசாயிகளுக்கும் மின்னிணைப்பு வழங்க வேண்டுமென்று மின்வாரிய அதிகாரிகளையும் தமிழக அரசையும் கேட்டுக் கொள்கின்றோம்.
சாதாரண முறையில் இலவச மின்னிணைப்பை கொடுப்பதில் இலவசம் என்பதற்கு பதிலாக மின்னிணைப்பு கொடுக்க ஆகும் செலவினங்களை மின்நுகர்வோர்கள் ஏற்றுக் கொள்ளும் திட்டங்களுக்கு மட்டும் தான் இலவச மின்னிணைப்பு தருவதென்ற அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும், 31.03.2013 முடிய சாதாரண முறையில் மின்னிணைப்பு வேண்டி பெரம்பலூர் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் தயார்நிலை பதிவேட்டில் பதிவு செய்த 577 விவசாயிகளுக்கு மின்னிணைப்பு 2025-2026 ஆம் ஆண்டு இலக்கிட்டில் வழங்க வேண்டும்.
2025-2026ம் ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்னிணைப்பு சட்டமன்றத்தில் அறிவித்து பல மாதங்களாகியும் மாவட்ட வாரிய இலக்கீடு ஒதுக்கவில்லை. மாவட்ட வாரியாக இலக்கீடு ஒதுக்கீடு செய்வதில் சாதாரண முன்னுரிமையில் தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின்னிணைப்பு கொடுக்க வேண்டும்.
தமிழக முதல்வரால் அறிவித்த திட்டங்களில் மின்னிணைப்பு வழங்காததை வழங்க வேண்டுமென்று கேட்ட விவசாயிகளுக்கு ஓராண்டுகளாகியும் வழங்கவில்லை. இதுபற்றி அரசுக்கு தெரிவித்து செலவில்லாமல் மின்னிணைப்பு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின்னிணைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம், என தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.