Perambalur: Tamil Nadu government’s announcements for sanitation workers are warmly welcomed: Chairman Tholl. Thirumavalavan interviewed!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களையும் அவர்களுக்கு ஆதரவாக போராடிய அமைப்பினரையும் போலீசார் கைது செய்திருப்பது வேதனைக்குரியது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு விசிக ஆதரவலித்த நிலையில், தற்போது பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். ஆனால் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை தாங்கள் வலியுறுத்துவதாக தெரிவித்த அவர் தமிழக முதல்வரிடம் நாங்கள் தூய்மை பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கையை குறித்து மீண்டும் பிரிசீலனை செய்ய எடுத்துரைப்போம் என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களையும் அவர்களுக்கு ஆதரவாக போராடிய அமைப்புகளையும் காவல்துறையினர் கைது செய்திருப்பது வேதனைக்குரியது என்றார். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும் நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் தெரிவித்த அவர்பன்னாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் அடைப்படையில் காங்கிரஸ் ஆட்சியின்போதே அனைத்து துறைகளிலும் தனியார் மயமாக்கள் என்பது இந்திய அரசின் கொள்கை முடிவாக உள்ளது என்றார்.

திருநெல்வேலி மனோன்மனியம் பல்கலைகழகத்தில் மாணவி ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த நிகழ்வு கொள்கை ரீதியாக ஏற்புடையதாக இருந்தாலும், சபை நாகரீகம் என்று வரும்போது அது ஏற்புடையதல்ல எனவும், அதேபோல் ஆளுநருக்கும் சபை நாகரீகம் என்பது தேவை அவர் அடிக்கடி தமிழ் மற்றும் திருவள்ளுவரோடும் தவறான ஒப்புமை செய்து அதை பரப்ப முயற்சிக்கிறார். அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஏனென்றால் அவரே சட்டப்பேரவையில் சபை நாகரீகத்தை மதிக்காமல் வெளியேறியும் இருக்கிறார் என்பதை நினைவுபடுகிறேன் என்றார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநரின் தேநீர் விருந்தில் தொடர்ந்து இம்முறையும் நாங்கள் பங்கேற்க போவதில்லை, இதை அவரை அவமதிக்கும் நோக்கில் அல்ல., அவர் எங்களது உணர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான புறக்கணிப்பே என்றார். அப்போது, மாநில பொறுப்பாளா இரா.கிட்டு, பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினகுமார், மாவட்ட துணை செயலாளர் வெங்கனூர் கிருஷ்ணகுமார், எசனை காமராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் தங்க.சண்முகசுந்தரம், வக்கீல் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!