Perambalur Tamilselvan MLA has opened a EB sub-station at Arumbamur – Mettur at Rs.13.74 crores.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் – மேட்டூரில் ரூ.13 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணைமின் நிலையத்தை தமிழ்செல்வன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர், பூலாம்பாடி மற்றும் மலையாளப்பட்டி பகுதிகளில் அதிகபடியான கிணற்றுப் பாசன விவசாயிகளும், மரவள்ளிக் கிழங்கு அறவை ஆலைகளும், கோழிப்பண்ணைகளும் அதிகபடியாக உள்ளது. இந்த தொழில்களுக்கு தேவையான அளவு சீரான மின்சார விநியோகம் கிடைக்காமல் விவசாயிகளும், தொழில் முதலீட்டாளர்களும் பெரும் அவதிப்பட்டு வந்தனர். எனவே அந்த பகுதியில் தனியாக துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து. அ மேட்டூர் பகுதியில் சுமார் 25 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய துணைமின்நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.13 கோடியே 74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்காக அ.மேட்டூர் கொட்டாரகுன்று சாலையில் இந்துசமய அறநிலைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றது. இது நாள் வரை இந்த பகுதிகளுக்கு கிருஷ்ணாபுரம் துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 110/22 கிலோ மின்னழுத்தம் கொண்ட புதிய துணைமின்நிலைய திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ இளம்பை தமிழ்செல்வன் தமைமை தாங்கி திறந்து வைத்து பேசினார். அப்போது இந்த புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படுவதின் மூலம் சுமார் 25 ஆயிரம் மின்நுகர்வோர்கள் சீரான மின்சாரம் பெறுவார்கள். மேலும் கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் தற்போது உள்ள மின்பளு குறைக்கப்பட்டு அந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படும் மற்ற கிராம மக்களுக்கும் சீரான மின்சாரம் கிடைக்கும் என கூறினார்.
மேலும் இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட மின்பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் கருப்பையா, செயற்பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர்கள் மாலதி, கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட அவைத்தலைவர் துரை, மீனவரணி செயலாளர் முருகேசன் மற்றும் மின்சார வாரிய பணியாளர்களும், விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டனர்.