பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும். பிப்19 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பெரம்பாலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் பிப்.19 அன்று நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளலாம். காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் பணிபுரியும் சீருடை பணியாளர்கள் கலந்துக்கொள்ள இயலாது.
பணியில் புதியதாக சேர்ந்து ஆறு மாத காலத்திற்குட்பட்டவர்கள் கலந்து கொள்ள இயலாது. ஒப்பந்த பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரின் நிர்ணயத்திற்குட்பட்ட தினக்கூலி பணியாளர்கள் கலந்துகொள்ள இயலாது.
போக்குவரத்து துறை, மின்சார வாரியம், குடிநீர்வடிகால் வாரியம் அலுவலர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அந்தந்த துறை மூலம் வழங்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் வெற்றிப்பெறும் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் அரசு ஊழியர;களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர்.
போட்டிகளில் கலந்துகொள்ளும் அரசு ஊழியர்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி அந்தந்த அலுவலகத்தின் பொறுப்பாகும்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு துறை அலுவலகங்களில் பணிபுரியும் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் அரசு ஊழியர்கள் தங்கள் துறை அலுவலகத் தலைவரிடம் உரிய அனுமதியுடன் கடிதம் பெற்று போட்டிகள் நடைபெறும் 19 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தரவேண்டும்.
ஆண்களுக்கான தடகளப்போட்டிகளில் 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 ஒ 100 மீ தொடா;ஓட்டம் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கான தடகளப் போட்டிகளில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 x 100 மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெறும்.
மேலும் குழுப்போட்டிகளாக இருபாலருக்கும் இறகுப் பந்து, கூடைப் பந்து, டென்னிஸ், கபாடி, டேபிள் டென்னிஸ், கையுந்து பந்து போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் அரசு ஊழியா;கள் தங்களது பெயா;களை 17-ந் தேதி காலை முதல் 18-ந் தேதி மாலை வரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா; நலன் அலுவலர் அவர்களிடம் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு 9443376054 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.