Perambalur: Trained at the IOB – RESTI center, they repaired the public’s cell phones for free!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் செல்போன் பழுது நீக்கும் பயிற்சி கடந்த ஜுன். 23 முதல் இலவசமாக பயிற்றுவிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு நாளான இன்று ஒரு நாள் பயிற்சி பட்டறை செயல்பட்டது. செல்போன் பழுது நீக்கும் பணியை ஒரு நாள் இலவசமாக பொதுமக்களுக்கு பயிற்சி மைய இயக்குனர் வ.முருகையன், முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமர் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெரம்பலூர் கிளை முதுநிலை மேலாளர் இளவேனில் முன்னிலையில் நடந்தது.
பயிற்சி பெற்ற மாணவர்கள், பொதுமக்களின் செல்போனில் உள்ள குறைகளை கண்டறிந்து சரி செய்து கொடுத்தனர். இதன் மூலம் கற்றல் திறன் மேம்பட்டு, சந்தைப் படுத்தும் திறனை அறிந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் திறன்வளர்ப்பு பயிற்றுனர் சீனீவாசன், பயிற்றுனர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இப்பயிற்சி மையம் மூலமாக வரும் 28-07-2025 முதல் நடக்கவிருக்கும் இலவச சிசிடிவி, ஸ்மோக் டிடக்டர் மற்றும் ஃபயர் அலாரம் நிறுவலுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.