Perambalur: Transformer copper coil robbers challenge the police; They are still in the loop at 2 places today!! They took away oil and coils worth 2 lakhs!

பெரம்பலூர் மாவட்டத்தில், வயல்வெளிப்பகுதியில் நிற்கும் மின்சாரத்துறைக்கு சொந்தாமான டிரான்ஸ்பார்மரில் இருந்து லட்சம் மதிப்புள்ள ஆயில் மற்றும் காப்பர்களை காயில்களை கொள்யைடித்து சென்றனர். இதனால், விவசாயிகள், பொதுமக்கள் தற்போது கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். நேற்றிரவு லப்பைக்குடிக்காடு அடுத்துள்ள அத்தியூர் மற்றும் ஆடுதுறை கிராமங்களில் உள்ள டிரான்ஸ்பார்களில் பெட்டியை திறந்து, இருந்த காப்பர் காயில் மற்றும் ஆயில் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரியத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆலத்தூர், வேப்பந்தட்டை என கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் நேற்றிரவு வேப்பூர் ஒன்றியத்தில் கைவரிசை காட்டிய சம்பவம் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதோடு, கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497