Perambalur: Truck-bike collision near Mangalamedu; One died!
பெரம்பலூர் மாவட்டம் : மங்களமேடு அருகே இன்று சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர்- எளம்பலூர் சாலையை சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர், அவரது மனைவி லதாவுடன் (35) குன்னம் அருகேயுள்ள அகரம் சிகூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தி்ருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மங்களமேடு அருகே வந்தபோது சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த லதா பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்த்து வருகின்றனர்.