Perambalur: Two arrested for smuggling sand on a two-wheeler without permission!
பெரம்பலூர் மாவட்டம் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மங்களமேடு போலீசார் சிறப்பு ரோந்து மேற்கொண்டபோது வெள்ளாற்று பகுதியில் இருசக்கர வாகனம் மூலம் மணல் கடத்தி வந்த திருமாந்துறையை சேர்ந்த ராமு மகன் விக்கி @ விக்னேஷ் (19) ராஜ்குமார் மகன் முகிலன் (19) ஆகியோரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.5000 மதிப்புள்ள 17 மணல் மூட்டைகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் போலீசார் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என ர தெரிவித்துள்ளனர்.