Perambalur Urban Measurement Project Workshop: The Collector was headed.

பெரம்பலூர்: நவீன நகர அளவை கருவிகளை கொண்டு பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நில அளவை பணிகள் நடந்து வருகின்றன. இந்த, நில அளவை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் நகராட்சியில் பெரம்பலூர் (வடக்கு) கிராமத்தின் ஒரு பகுதி, பெரம்பலூர் (தெற்கு) கிராமம் முழுவதும், அரணாரை (தெற்கு) கிராமத்தின் ஒரு பகுதி, துறைமங்கலம் கிராமத்தின் ஒரு பகுதி என இவையனைத்தையும் சேர்த்து மொத்தம் 2061.47 ச.மீ. அதாவது 2.06 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

மேலும் இந்நிலப்பரப்பின் சுற்றளவினை டிராவர்ஸ் மூலமாக அளவு செய்யப்பட்டு, இப்பகுதிகளை 21 வார்டுகளாகவும், 21 வார்டுகளை 716 பிளாக்குகளாகவும் பிரிக்கப்பட்டு நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு அளவீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இந்நடைமுறையின் கீழ் ஒவ்வொரு உரிமையாளருக்குமான வீடுகளை தனித்தனியாக நகர அளவை எண்கள் கொடுக்கப்பட்டு நில அளவை செய்யப்படுகிறது.

இப்பணி 2013-ல் தொடங்கப்பட்டு, பூர்வாங்கப்பணி, இடக்குறியீட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளது தேதி வரை 427 பிளாக்குகள் அளவுப் பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 289 பிளாக்குகளை டிசம்பர் மாதத்திற்குள் விரைந்து முடிக்க அலுவலர்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது, என தொpவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது – பொறுப்பு) சேதுராமன், நகர நில அளவை ஆய்வாளர் பாண்டியன், பராமரிப்பு ஆய்வாளர் சண்முகம், நகர அளவை துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நில அளவர் அர்ச்சுணன் மற்றும் களப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!