Perambalur: VCK protests demanding the arrest of the lawyer who insulted the Supreme Court Chief Justice!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீதிமன்றத்தில் அவமதித்த வக்கீல் ராகேஷ் கிஷோர் என்பவர் மீது எஸ்சி / எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் UAPA ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வலியுறுத்தியும், விசிக தலைவர் திருமாவளவனிடம் வீண் தகராறு செய்த ராஜீவ் காந்தி என்ற வக்கீலையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், விசிக தலைவருக்கு அரசுகள் உயர் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்பாட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விசிக மாவட்ட செயலாளர்கள் ரத்தினவேல், அ.கலையரசன் ஆகியோர் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் நகர செயலாளர் தங்க சண்முகசுந்தரம் வரவேற்றார்.

பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் ரேணுகா வேல்முருகன், மாவட்ட பொருளாளர் மகளிர் விடுதலை இயக்கம் மேற்கு செல்வாம்பாள், ஒன்றிய செயலாளர்கள் வெற்றியழகன், வரதராஜன், மா. இடிமுழக்கம் பிச்சைப்பிள்ளை, ஒருங்கிணைப்பாளர்கள் தயாளன், கேட் மணி, ரவிக்குமார் கண்ணதாசன், செல்லப்பாண்டியன், மணிகண்டன், கார்த்திக் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாநில துணை செயலாளர் வழக்‌கறிஞர் அணி பேரா.முருகையன், மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, மாநில துணை செயலாளர் இஸ்லாமிய ஜனநாயக பேரவை ராசித்அலி, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன். பாவாணன், மண்டல துணை செயலாளர் வழக்கறிஞர் ரா ஸ்டாலின், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் சா.மன்னர் மன்னன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி. தமிழ் மாணிக்கம், கரூர் மேலிட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஜெ. தங்கத்துரை, மாநில செயலாளர் விவசாய பாதுகாப்பு இயக்கம் வீர. செங்கோலன் மாவட்ட அமைப்பாளர்கள் பூ. அழகேசன். அய்யம்பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அய்யாக் கண்ணு, பாலன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மணிமாறன், ராமர், வேலுச்சாமி, காமராஜ், காட்டு ராஜா, பாலசுப்பிரமணியன், மானக்ஷா, மகளிர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த வீரலட்சுமி ,வான்மதி ராசாத்தி, ரம்யா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!