Perambalur VCK resolution Passed demanding to stop the sand fleece by day-night

பெரம்பலூரில் இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

செயற்குழு கூட்டத்தில், எந்நேரத்திலும் தேர்தல் வரலாம், அதனை எதிர்கொள்வதற்கு கட்சியினர் தயார் நிலையில் இருக்க வேண்டியும், அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்வதற்கு நெறியாளர்கள் ஒதுக்கப்பட்ட காலகெடுவிற்குள் முடிக்க மறு சீராய்வு கூட்டம் நடந்தது. அதில் வரும் நவ.30-க்குள் அமைத்து சீரமைத்து தலைமைக்கு ஒப்படைக்க கோரியும் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்ததின் பேரில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், நெறியாளர் சு.திருமாறன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.

கூட்டத்தில், ஒவ்வொரு கிளையிலும், மறுசீராய்வு மற்றும் கிளைகள் கட்டமைப்பு குறித்து படிவம், பகுதி பகுதியாக பிரித்து குழுக்களாகவும், மாநில, மாவட்ட , தொகுதி, ஒன்றிய நகர பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளை வரும் நவ-26 க்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும்,

கட்சியின் முன்னோடியும், தலைமை நிலைய செயலாளர் மூ.பாண்டியராசனின் மனைவியார் மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்ய நிர்வாகிகள் அனைவரின் ஒத்துழைப்புடன் நிதியுதவி செய்வது,

வேப்பந்தட்டை ஒன்றியம் வெங்கனூர் — ஆறு உள்ளிட்ட பல ஊர்களில் இரவு பகலாக அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடத்தும் மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன.

நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சு.தமிழரசன், நாடாளுமன்ற தொகுதி துணைச்செயலாளர் ச.மன்னர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர் ந.கிருஷ்ணகுமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு. உதயகுமார், மாநில செயலாளர்கள் ரசீத் அலி, கராத்தே பெரியசாமி, வழக்கறிஞர் ரத்னகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!