Perambalur: VCK to hold a protest tomorrow condemning DMK MP A. Raja; a resolution was passed at an emergency meeting!

பெரம்பலூர் மாவட்ட விசிக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்நது. நகர செயலாளர் தங்க.சண்முக சுந்தரம் வரவேற்றார். வழக்கறிஞர். மண்டல செயலாளர் ஸ்டாலின், செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,

விசிக தலைவர் தொல்.திருமாவளவனை, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி சிறுமைப்படுத்தி தவறாக பேசியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியதுள்ளதாகவும், அதற்கு அக்கருத்தை அவர் திரும்ப பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், நாளை மாலை சுமார் 5 மணி அளவில் ஆ.ராசா எம்.பியை கண்டித்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை & குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரத்தில் ரோந்து பணிகளை துரிதப்படுத்தி காவலர்களை, மாவட்ட காவல் துறை நியமிக்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாக குழு கூட்டத்தில், மாநில செயலாளர் வீரசெங்கோலன், முன்னாள் மண்டல செயலாளர் ரா.கிட்டு, முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் மன்னர் மன்னன், மு.மா.க மாநில துணைச் செயலாளர் தமிழ்குமரன், க.பொ.வி.இ மாநில துணைச் செயலாளர் அண்ணாதுரை, தொண்டர் அணி மாநில துணைச் செயலாளர் பெரியசாமி , ம.வி.இ மாநில துணைச் செயலாளர் செல்வாம்பாள், ஒன்றியச்செயலாளர்கள் வெற்றியழகன், இடி முழக்கம், பிச்சைப்பிள்ளை, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மு.மா.க மாவட்ட அமைப்பாளர் அய்யம்பெருமாள், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் பழனிவேல்ராஜன் உள்பட கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks