Perambalur: Vehicles used in liquor prohibition crimes to be auctioned! Police department announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு அதன் காரணத்தால் மதுவிலக்கு அமல் சட்டம் பிரிவு 14(4) பிரகாரம் கைப்பற்றப்பட்டுள்ள 40 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டும் அவற்றிக்கு விலை பெறப்பட்டுள்ளது.

மதிப்பீடு உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்படும் வாகனங்கள் தவிர்த்து மீதமுள்ள வாகனங்கள் அனைத்தையும் வரும் 14.08.25 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மேல் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலத்தில் விட்டு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை பொது ஏலத்தில் பெற்றுக்கொள்ளும் நபர்கள் அந்த வாகனங்களின் ஏலம் எடுத்த தொகையின் மதிப்புடன் கூடுதலாக 18% வரியுடன் உரிய மொத்த தொகையினை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் எடுத்த உடனே மொத்த தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் .

வாகனங்களை பொது ஏலததில் எடுக்க உத்தேசிக்க உள்ளவர்கள் 11.08.25 முதல் 12.08.25 ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது ஆதார்கார்டு நகலுடன் ரூ.500/- முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டு அதன்பின்னர் 13.08.25 ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு மேல் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். டோக்கன் இல்லாத நபர்கள் பொது ஏலத்தில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்க இயலாது என்றும், மேலும் விவரங்களுக்கு 7904136038, 9498162279, 9787658100 எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!