Perambalur: We will help the public by setting up a Thanner pandal! DMK district in-charge V. Jagatheesan report!
தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கு ஏற்ப, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நீர், மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு உதவிட , பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்துள்ளதாவது :
தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கி வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது, வரும் நாட்களில் வெயில் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கொளுத்தும் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைத்திட , தி.மு.க.தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி,ஒன்றியங்கள், பேரூராட்சிகள், வார்டுகள், ஊராட்சிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நீர்,மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள் தாகம் தீர்த்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.
இது தொடர்பான பணிகளை சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கிளை மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக முன்னனியினர் இணைந்து செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், என அதில் தெரிவித்துள்ளார்.