Perambalur: World Tourism Day celebration in Valikandapuram; Collector’s information!
பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பாக உலக சுற்றுலா தினம் 27.09.2025 அன்று வாலிகண்டபுரம் வாலீஸ்வரன் கோவிலில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வரலாற்று ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, வாலிகண்டபுரம் கோவிலின் தொண்மை பற்றியும், வரலாற்று சிறப்பம்சம் பற்றியும், கல்வெட்டு குறிப்புகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளனர். எனவே இந்த விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் சுற்றுலா தினத்தன்று உலக சுற்றுலா தினவிழா தொடர்பாக கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் இவ்விழாவில் வழங்கப்படவுள்ளது. மேலும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகழ்சிகளும் நடைபெறவுள்ளது என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.