Perambalur: You can lead a healthy life even if you have diabetes! Nilan Diabetes Clinic Specialist Dr. Lakshika gives information!!

இன்றைய வேகமான காலகட்டத்தில் நீரிழிவு (Diabetes) நோய் சாதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இது சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தால், இதய நோய், சிறுநீரகம் செயலிழப்பு, கண் பார்வை குறைபாடு போன்ற பல ஆபத்தான நிலைகளுக்குத் தள்ளி விடக்கூடியது. எனவே, விரைவில் கண்டறிந்து, விழிப்புணர்வுடன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது மிகவும் அவசியம் என்று பெரம்பலூர் நகரில் முதல் பிரத்தியேக நீரிழிவு சிகிச்சையகத்தின் (சர்க்கரை நோய்) நிபுணர், டாக்டர் லக்ஷிகா கூறுகிறார்.

நீரிழிவு என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் ஒரு நிலை. இது உடலில் இன்சுலின் என்ற ஹார்மோனின் உற்பத்தி குறைவாகவோ அல்லது சரியாக செயல்படாமையாலோ ஏற்படுகிறது.
நீரிழிவு நோயின் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் மிகவும் பொதுவாக காணப்படும் 3 வகைகள்: டைப் 1 நீரிழிவு (Type 1 diabetes) என்பது சிறுவயதில் அல்லது இளமைப் பருவத்தில் ஆரம்பிக்கும் வகை ஆகும். இதில் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது. டைப் 2 நீரிழிவு (Type 2 diabetes) என்பது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களில் ஏற்படுகிறது. உடலில் இன்சுலின் சரியாக பயன்படுத்த முடியாமல் போவதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. கர்ப்ப கால நீரிழிவு (Gestational diabetes): இது, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது முதன்முறையாக கண்டறியப்படும் நிலையாகும். இது ஒரு தற்காலிக நிலையாக இருக்கலாம். இவர்களுக்கு, எதிர்காலத்தில் நீரிழிவு ஏற்படும் சாத்தியம் 7 மடங்கு அதிகரிக்கிறது. குழந்தை பிறந்த 6 வாரங்களில் Oral Glucose Tolerance Test (OGTT) மூலம் ரத்த சர்க்கரையை பரிசோதிக்க வேண்டும். பிறகு, ஆண்டு தோறும் ரத்த சர்க்கரை பரிசோதனை செய்து வர வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான அபாயக் காரணகளில் உடல் பருமன், உடல் இயக்கத்தின் குறைபாடு, தவறான உணவு பழக்கம், மன அழுத்தம், குடும்ப மரபில் நீரிழிவு வரலாறு, முக்கியமானவை ஆகும். இதைத் தவிர, புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் போன்றவை நீரிழிவு நோயை தூண்டும் முக்கிய காரணகளாகும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் நீரிழிவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்! அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமாகத் தாகம் மற்றும் பசி ஏற்படுதல், உடல் எடை குறைதல், அடிக்கடி சோர்வாக உணருதல், காயங்கள் வேகமாக ஆறாதது, பார்வை குறைபாடு. இவை இருந்தால் சர்க்கரை பரிசோதனை செய்து பார்க்கவும்.

நீரிழிவு மேலாண்மையில் ABCD: A – A1C (HbA1c) அளவு 7% க்குக் கீழ் இருக்க வேண்டும். B – BP (இரத்த அழுத்தம்):140/90 mmHg க்கும் குறைவாக இருக்க வேண்டும். C – Cholesterol (கொலஸ்ட்ரால்): LDL (கெட்ட கொலஸ்ட்ரால்) அளவு குறைவாகவும், HDL (நல்ல கொலஸ்ட்ரால்) அளவு அதிகமாகவும் இருக்க வேண்டும். D – Diet & Drugs (உணவு மற்றும் மருந்துகள்): சரியான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் தகுந்த மருந்துகள் பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவை நன்கு கட்டுப்படுத்த முடியும். மன அமைதிக்காக தியானம் செய்யுங்கள்.

நீரிழிவு ஒரு உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும், சரியான விழிப்புணர்வும், வாழ்க்கை முறையிலான மாற்றங்களும், சீரான சிகிச்சையும் இருந்தால் அதை கட்டுப்படுத்தி, ஆரோக்கிய வாழ்க்கையை நடத்த முடியும் என நிலன் நீரிழிவு சிகிச்சையகம் உரிமையாளரும், நீரிழிவு (சர்க்கரை நோய்) நிபுணருமான டாக்டர் லக்ஷிகா தெரிவித்தார்.Nilan Diabetes Clinic, 270/B, Near Palakkarai, Amma Complex, Trichy Main Road, Thuraimangalam, Perambalur, Tamil Nadu 621220. contact: 98940 66109


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!