Perambalur: You can report the sale of drugs banned by the government on the Drug Free Tamil Nadu app; Collector information!
பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. போதைபொருட்கள் விற்கும் நபர்கள் குறித்த தகவலை தருவதற்கு Drug Free Tamil Nadu என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் Drug Free Tamil Nadu என்ற Appஐ பதிவிறக்கம் செய்து தங்களது பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் மேற்படி செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்தவரின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு போதைபொருட்கள் இல்லாத பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.