Personal home built 4,666 toilets in 4 days in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் (MGNREGS) ஆகியவை இணைந்து கிராமபுரங்களில் உள்ள பொதுமக்களிடம் கழிப்பறைகளால் உருவாகும் சுகாதாரம் குறித்து போதிய அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் இந்தியாவிலேயே முதன் முறையாக பெரம்பலூர; மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளில் சுமார் 6,000 தனிநபர் இல்லக் கழிப்பறைகளை 48 மணி நேரத்தில் கட்டி முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு 13.02.2017 காலை 7 மணிக்கு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டது.

இப்பணிகள் செயல்படுத்துவதை கண்காணிக்கும் பொருட்டு ஊராட்சிக்கு தலா ஒரு தொடர்பு அலுவலர் வீதம் உதவிஇயக்குநர் நிலையிலிருந்து ஊராட்சி செயலர் வரை அனைவரும் பணி அமர்த்தப்பட்டனர். இப்பணிக்காக ரூ.7,கோடியே 20,லட்சம் மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6 லட்சத்து 60,ஆயிரம் சிமெண்ட் கற்களும், 3 லட்சத்து 60 ஆயிரம் சிமெண்ட் உறைகளும், 30 ஆயிரம் சிமெண்ட் மூட்டைகளும் இதர (மணல், கதவுகள் கழிப்பறை கோப்பைகள்) பொருட்கள் அனைத்தும் கழிப்பறை கட்டும் இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இப்பணிகளுக்கு சுமார் 2,000 கொத்தனார்கள் மற்றும் 2,000 சித்தாள்கள் ஈடுபட்டனர். இப்பணிகளில் உரிய தொழில்நுட்பத்தை பின்பற்ற 2,000 கொத்தனார்களுக்கும் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் 12.02.2017 அன்று 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 48 மணி நேரத்தில் நடைபெற்ற தனிநபர் இல்லக் கழிப்பறைகளின் கட்டுமானப் பணிகளின் படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 800 தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 1,100 தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், ஆலத்தூர; ஒன்றியத்தில் 1,500 தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 1266 தனிநபர் இல்லக் கழிப்பறைகளும் என மொத்தம் 4 ஒன்றியங்களிலும் கடந்த பிப்.13 முதல் இன்று பிப்.16 வரை மொத்தம் 4,666 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கழிப்பறைகளை கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. போதுமான பணியாளர்கள், தண்ணீர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் காரணமாக திட்டம் தொய்வடைந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 78,635 கழிப்பறைகள் கட்ட திட்டமிட்ப்பட்டு இதுவரை 46,166 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கழிப்பறைகளும் மார்ச் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும். பெரம்பலூர் மாவட்ட ஊரகப் பகுதிகளை திறந்த வெளிக் கழிப்பிடமில்லா பகுதிகளாக உருவாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!