Petrol, diesel price hike across the country with effect from midnight today
பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30-ஆம் தேதிகளில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்,டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.அதன்படி இன்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,பெட்ரோல் லிட்டருக்கு 13 காசுகளும்,டீசல் லிட்டருக்கு 12 காசுகளும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.இந்த விலையேற்றத்தின்படி நாளை முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65.68 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் டீசல் 56.10 ரூபாய்க்கும் விற்கப்படும்.