Petrol, diesel price rises as a human chain on behalf of TMC Youth Wing in Namakkal
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் தமாக இளைலஞரணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தமாக இளைஞரணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நாமக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அருள் ராஜேஸ் வரவேற்றார்.
இதில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் நாமக்கல் நகர தலைவர் சக்திவெங்கடேஷ், மாவட்ட வர்த்தகர் அணி ஸ்டாலின், இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் குமரேசன், கார்த்திக், இளைஞரணி மாவட்ட செயலாளர்கள் குமார், சாகுல், குமரேசன், மோகனூர் வட்டார தங்கராஜ், சந்தானம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்த் நன்றி கூறினார்.