Pharmaceuticals demonstrated in Namakkal Government Hospital
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
இதில் அரசு ஆஸ்பத்திரிகளில் தாய் திட்டத்தில் புதிய மருந்தாளுனர் பணியிடம் உருவாக்க வேண்டும். இரவு பணியை ரத்து செய்ய வேண்டும். தலைக்காயம் மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மருந்தகங்கள் 24 மணி நேரம் இயங்க கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, மருந்தாளுனர்களை நியமனம் செய்ய வேண்டும். இந்திய மருந்தியல் சட்டப்படி மருந்துகளை மருந்தாளுனர் மட்டுமே கையாள வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் சேகர், முரளி, அன்பழகன், சாலை சுப்பிரமணியன், கோபிகிருஷ்ணன் உள்பட மருந்தாளுனர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.