செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு, அரசின் சாதனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்புகைப்பட கண்காட்சியில், தமிழக முதலமைச்சர் மற்றும் மைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்ச்சிகள் குறித்தும் பல்வேறு புகைப்படங்கள் அடங்கிய சிறு புகைப் படக் கண்காட்சிகள் அரசின் முக்கிய விழாக்கள், பொதுமக்கள் வெகுவாக கூடும் இடங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பெரம்பலூர் ஒன்றியம் சிறுவாச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற வாரசந்தையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப் படக் கண்காட்சியினை நேற்று பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இச்சாதனை விளக்க புகைப் படக் கண்காட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது..
சிறுவாச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களும் இப்புகைப்பட கண்காட்சியினை ஆர்வமுடன் பார்வையிட்டு தமிழக முதலமைச்சரால் திட்ட மிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் பயனள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துச் சென்றனர்.